மனசை விட்டுட்டாரோ.. அல்வா மாதிரி.. கைக்கு வந்த சான்சை மிஸ் பண்ணிட்டாரே எடப்பாடி.. என்ன நடந்தது?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. தனது கைக்கு வந்த 2 வாய்ப்புகளை நழுவவிட்டு உள்ளார். அல்வா மாதிரி தேடி வந்த அரசியல் வாய்ப்பை அவர் நழுவவிட்டுள்ளார்.
இந்த ஒரு மாதத்தில் மழை காரணமாக தமிழ்நாட்டில் இரண்டு பெரிய பேரழிவுகள் ஏற்பட்டது. உதாரணமாக வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது.

இந்த புயல் சென்னைக்கு பெரிய சிக்கலாக மாறியது. 100 கிமீ தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இருந்தது. இதனால் கடுமையான மழை மேகங்களை புயல் சென்னையை நோக்கி கொண்டு வந்தது. இதனால் சென்னையில் கடும் வெள்ளம், புயல் பேரழிவு ஏற்பட்டது.
எடப்பாடி வரவில்லை: சென்னையில் பெய்த கனமழை, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர்.. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார். அதோடு ஒருநாள் சென்னையில் களமிறங்கி நிவாரண பணிகளை செய்தார். அதன்பின் அவர் ஈரோட்டிற்கு சென்றார்.
சென்னையில் புயல், வெள்ளம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இல்லாமல்.. ஈரோட்டில் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றது விமர்சனங்களை சந்தித்தது. ஈரோட்டில் நடந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் துரைசாமி கவுண்டரின் நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமி சென்னை வெள்ளத்தின் போது 2 நாட்கள் மட்டுமே சென்னையில் இருந்தார்.
தென் மாவட்டங்களுக்கு செல்லவில்லை; அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அதேபோல் தற்போது தென் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசியில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த வெள்ளத்திலும் பேட்டி கொடுத்ததை தவிர எடப்பாடி பழனிசாமி.. நேரடியாக களத்திற்கு சென்று பணிகள் எதையும் செய்யவில்லை.
சென்னை - தென் மாவட்டங்களில் பலம் இல்லை; அதிமுக சென்னையிலும் பலமாக இல்லை. தென் மாவட்டங்களிலும் பலமாக இல்லை. தென் மாவட்டங்களில் சாதி ரீதியாக எடப்பாடிக்கு கடுமையான எதிர்ப்பு உள்ளது. அவர் முக்குலத்தோரை ஒதுக்கிவிட்டார் என்று கடுமையான எதிர்ப்பு உள்ளது .
சென்னையும் கூட திமுகவின் கோட்டையாக உள்ளது. திமுக சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல், மேயர் தேர்தல் என்று வரிசையாக அடித்து நொறுக்கியது. ஆனால் அதிமுகவால் அப்படி சென்னையில் கால் பதிக்க முடியவில்லை.
அப்படி இருக்க சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் இரண்டிலும் பணிகளை செய்யாமல் அதிமுக மோசமாக செயல்பட்டு உள்ளது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி களத்திற்கு பெரிதாக வராமல் ஏமாற்றம் அளித்துள்ளார். பேரிடர் என்றாலும் கூட.. கைக்கு வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி ஒரு முறையான எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு இருக்கலாம. அறிக்கையை தாண்டி அவர் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் எடப்பாடி ஒதுங்கியே இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
மனசை விட்டுட்டார்: ஒருவேளை லோக்சபா தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிடவில்லை. அந்த தேர்தலில் அவர் கவனமே செலுத்தவில்லை. அவரை மனசை விட்டுவிட்டார் . அதனால்தான் இப்படி நடந்துகொள்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications