3 நாள் டைம்.. அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்ட அமைச்சர் எவ வேலு! 4 மாவட்ட சாலைகள் விரைவில் சீரமைப்பு
சென்னை: வரலாறு காணாத மழையினால் பாதிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளில் ஆய்வுசெய்த அமைச்சர் எ.வ.வேலு பழுதடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை நிரந்தரமாக சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து, மூன்று தினங்களுக்குள் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு உள்ளார்.
வரலாறு காணாத மழையினால், 4 தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளில் 8வது நாளாக அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணிகள். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதிக்கு அருகே குரும்பல் என்னும் இடத்தில் உள்ள பாலம், வரலாறு காணாத பெய்த மழைநீர் வெள்ளதால் உடைந்து விட்டது. இப்பாலத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், எவ வேலுவும் சென்று ஆய்வு செய்தார்கள். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எவ வேலு, "வரலாறு காணாத பெய்த மழையினால், நாகர்கோவில்-5. விருதுநகர்-13. தென்காசி-13, தூத்துக்குடி-113 மற்றும் திருநெல்வேலியில்-44 சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டு விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் திருச்செந்தூரையும் பாளையங்கோட்டையும் இணைக்கின்ற தரைப்பாலம் உடைந்து விட்ட காரணத்தினால், தற்காலிகமாக 40 மீட்டர் நீளத்திற்கு கான்கீரிட் சாலை போடப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் உள்ள தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்த வேண்டும் என்று அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பின்படி, தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 1127 தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்டப் பாலங்களாக கட்டப்பட்டு வருகிறோம். இதில், இந்த தரைப்பாலமும் அடங்கும். இந்த தரைப்பாலத்தை, உயர்மட்டப்பாலமாக கட்ட ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். தாமிரபரணி ஆற்றில் செக்டேம் கட்டுவது என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளன. ஆனால், தாமிரபரணி ஆற்றின் கரையை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
நான்கு மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை நிரந்தரமாக சீரமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்து, மூன்று தினங்களுக்குள் தெரிவிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர் அவர்களிடம் தெரிவித்துள்ளேன். மாஞ்சோலை மலை கிராமத்திற்கு சாலை அமைக்க, வனத்துறையிடம் ஒப்புதல் பெற்றவுடன், சாலை அமைக்கப்படும்.
இந்த ஆய்வு பணிகளின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் பி.சந்திரமோகன், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications