அனல் பறக்குது ஆசியாவில்.. இந்தியாவில் உச்சத்தில் வெப்பம்! ஆனா "இந்த" 2 நாட்டில் நிலைமை அதை விட மோசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆசியாவில் பெரும்பாலான நாடுகளில் இப்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக முடங்கிப் போய் இருக்கிறது.

கடந்த காலங்களை விட இந்தாண்டு கோடை வெப்பம் மிக மிக மோசமாக இருக்கிறது. இந்தியாவில் மே மாதம் தான் பொதுவாக வெப்பம் உச்சம் தொடும். ஆனால், இந்தாண்டு ஏப்ரல் மாதமே பல பகுதிகளில் வெப்பம் உச்சம் தொட்டது.

Extreme Heatwave in various South Asian countries which has the worst

ஆனால், இந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை. பெரும்பாலான ஆசிய நாடுகளில் இதே நிலை தான் இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் வெப்பம் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

வெப்ப அலை: ஆசியாவில் மிக மோசமான வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. அதீத வெப்பத்தால் பல இடங்களில் பல இடங்களில் சுகாதார பாதிப்புகளும் ஏற்படுகிறது. வெப்ப அலை என்றால் ஏதோ ஓரிரு பகுதிகளில் மட்டும் இல்லை. ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலையின் அனல் அடித்துத் தூக்குகிறது. குறிப்பாகத் தென்கிழக்கு ஆசியாவில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர் எனத் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் மிக மோசமாக இருக்கிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக மதிய நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிறைய தண்ணீர் குடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் குறிப்பாகக் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

எங்கு மோசம்: இதற்கிடையே தென்கிழக்கு ஆசியா நாடுகளில் எங்கே எந்தளவுக்கு வெப்பம் மோசமாக இருக்கிறது என்பதை விளக்கும் படம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதைப் பார்த்தாலே ஆசிய நாடுகளில் வெப்பம் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவை விட அதிக வெப்பம்: இதில் இந்தியாவில் 112.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவை விட இரு நாடுகளில் நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் தான் இந்தியாவைக் காட்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. மியான்மர் நாட்டில் அதிகபட்சமாக 113 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், தாய்லாந்து நாட்டில் 112.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இது தவிர வங்கதேசம் ( 109.04 டிகிரி பாரன்ஹீட்), லாவோஸ் ( 108.32 டிகிரி பாரன்ஹீட்), வியட்நாம் ( 108.32 டிகிரி பாரன்ஹீட்), சீனா ( 107.42 டிகிரி பாரன்ஹீட்) நாடுகளிலும் வெப்பம் அதிகமாகவே இருந்துள்ளது. நமது அண்டை நாடான நேபாளம் இமயமலைக்கு அருகிலேயே அமைந்திருந்தாலும் கூட அங்கும் 107.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அந்தளவுக்கு வெப்பம் மோசமாக இருக்கிறது. பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இந்தோனேசியா நாடுகளிலும் இயல்பை காட்டிலும் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு: இப்படி பல்வேறு நாடுகளிலும் வெயில் அதிகமாக இருப்பதால் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், வெயிலால் பயிர்களும் கூட சேதம் அடைந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

மற்றொரு ஆசிய நாடான கம்போடியாவில் 170 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த வாரம் முழுக்க நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 43C (109F) வரை இருக்கும் என்று அந்நாட்டு வானிலை மையம் கணித்துள்ளது. இப்படி பெரும்பாலான ஆசிய நாடுகளில் வெப்ப அலை வீசும் நிலையில், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+