மக்களே நாளை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. பெங்கல் புயலால் கடலூர் கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு
கடலூர்: ஃபெங்கல் புயல் காரணமாக கடலூர் மாவட்ட மக்கள் நாளை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்த மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது 60 கிலோமீட்டர் முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று என்பது வீச உள்ளது.

தற்போது ஃபெங்கல் புயல் 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் புயல் நாளை கரையை கடக்கும்போது சூறைக்காற்று, கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சென்னை மற்றும் புதுச்சேரியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த புயல் காரணமாக கடலூரில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்ய செல்வக்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் கடலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவுரையையும் வழங்கி உள்ளார். அதன்படி நாளை பிற்பகலில் கடலூர் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளிரே வர வேண்டாம். புயல் கரையை கடக்கும்போது 60 கிலோமீட்டர் முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் இந்த அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications