வரலாற்றில் இது முதல்முறை.. 50 வருடத்தில் இப்படி புயல் வந்ததில்லை.. 500 கிமீ தூரத்தை கடக்க 5 நாளா? ஆஹா
சென்னை: ஃபெஞ்சல் புயல் ஓய்ந்த பிறகும் மழை இன்னமும் விடவில்லை.. இன்றைய தினமும் 15 மாவட்டங்களில் மழை உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், பெஞ்சல் புயல் குறித்து, முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கடந்த 3 நாட்களாகவே, ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவு அதிகமாக இருந்தது.

இதன் காரணமாக, இந்த மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்து, பொதுமக்கள் பெருமளவு அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. முக்கிய ஆறுகள், ஏரிகள் உள்ளிட்டவை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளம் இன்னும் அதிகமாக ஏற்பட்டு, மக்கள் அதிக சிரமத்திற்குள்ளாகி, அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலையில், மொத்தம் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது... இதில், ஒரு நிலச்சரிவில் 7 பேர் பரிதாபமாக மண்ணில் புதைந்து இறந்துவிட்டார்கள்.. அந்த சடலங்களை மீட்கும் பணி இன்றும் தொடர்கிறது..
தொடர்கிறது மழை: இன்றும்கூட, தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (3-12-2024) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், வீசிச்சென்ற ஃபெஞ்சல் புயல் பற்றின புதுபுது தகவல்கள் வெளிவந்தவாறே உள்ளன.. அதாவது 50 ஆண்டுகால தமிழக புயல் வரலாற்றில் இதுபோன்றதொரு மெதுவாக நகர்ந்து, கரை கடந்த புயல் இல்லையாம்..
5 நாட்கள்: இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "வழக்கமாக புயல்கள் 250 கி.மீ. முதல் 300 கிமீ. வரை 10 முதல் 12 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். ஆனால் ஃபெஞ்சல் புயலோ, 3 கி.மீ., வேகத்தில்தான் பயணித்தது.. வெறும் 500 கிமீ தூரத்தை கடக்க 5 நாட்கள் எடுத்துக்கொண்டுள்ளது.
எப்போதுமே புயல்கள் உருவாகிவிட்டால், அது உருவான நாளிலிருந்து 3வது நாளில் வலுவிழந்துவிடும். ஆனால் நவம்பர் 25ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அது உருவாகி 4 நாட்கள் கழித்து, அதாவது 29ம் தேதிதான் புயலாக உருமாறியது... கடந்த 50 வருட கால தமிழக புயல் வரலாற்றில், இப்படி மெதுவாக நகரும் ஒரு புயல் இருந்தது இல்லை.
இதுதான் காரணம்: வழக்கமாக, கடற்கரை பகுதியிலிருந்து, ஒரு புயல் கடந்து விட்டால் அது வலுவிழந்துவிடும். ஆனால், 9 மணி நேரம் ஒரே இடத்தில் நிலைகொண்டு, கடலில் உள்ள ஈரப்பதத்தையும் நன்றாக உள்வாங்கிக் கொண்டு, அதற்கு பிறகே மெதுவாக கரையை கடக்க ஆரம்பித்துள்ளது.. பல மாவட்டங்களில் அதிக மழை பெய்ததற்கு இதுவே முக்கிய காரணம்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இங்கிருந்து வலுவிழந்த பெஞ்சல் புயல், கர்நாடகாவின் பெங்களூர் வழியாக அரபிக் கடல் நோக்கி சென்று, அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் பெங்களூரிலும் மழை கொட்டி வருகிறது.. இன்றைய தினமும் கர்நாடகாவின் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications