புயல் பாதிப்பு.. முதல்வர் மெத்தனம்.. அதிமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டது.. பாய்ந்த எடப்பாடி
சென்னை: அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்பட்டோம். கனமழை பெய்த போதும் கூட விரைந்து துரிதமாக செயல்பட்டதன் காரணமாக மின்சாரத்தை கொடுத்தோம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை திருவெற்றியூரில் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கிய பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அபோது அவர் கூறியதாவது:- மழை ஒருவாரமாக பெய்து கொண்டே இருக்கிறது. ஒருவாரமாக தூங்கிக் கொண்டே இருந்துவிட்டு தண்ணீர் தேங்கிய பிறகு என்ன செய்ய முடியும். மழை பெய்து தண்ணீ தேங்கிய பிறகுதான் என்.எல்.சிக்கு போய் ராட்சத மோட்டாரை கண்டுபிடித்து கொண்டு வந்து தேங்கிய தண்ணீரை வெளியேற்ற இருக்கிறோம் என்கிறார்.

எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது பாருங்கள். முதல்வர் சொல்கிறார். இந்தியாவுக்கான வழிகாட்டியாக உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறுகிறார். ஊழலில் தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மக்கள் இன்று கேட்கிறார்கள். 5 ஆயிரம் கோடி திட்டம் என்று சொல்கிறீர்களே அதில் எவ்வளவு பணிகள் முடிந்துள்ளது.. எவ்வளவு பணிகள் பாக்கியுள்ளது.. இதற்காக செலவிட்ட தொகை எவ்வளவு என்று மக்கள் கேட்கிறார்கள்.
இதில் பெரும் ஊழல் நடந்து இருப்பதாக மக்களுக்கு சந்தேகம் உள்ளது. அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்பட்டோம். கனமழை பெய்த போதும் கூட விரைந்து துரிதமாக செயல்பட்டதன் காரணமாக மின்சாரத்தை கொடுத்தோம். அதிமுக ஆட்சி காலத்தில் தான் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கப்பட்டது. இன்றைக்கு பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு மழை பெய்தாலும் எவ்வளவு காற்று அடித்தாலும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்றுதான் பூமிக்கடியில் கேபிள் பதித்தோம்.
அதையும் சரியாக பயன்படுத்தவில்லை. நான் சொன்ன துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்டு எடுத்து இருக்கலாம். இதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான். அதோடு, ஏற்கனவே வடகிழக்கு பருவமழை வரும் போது சென்னை அவ்வப்போது பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும்.. ஏன் அரசுக்கு தெரியவில்லை.
எல்லா இடங்களிலும் நியாயவிலைக்கடைகள் உள்ளன. பால் பவுடர்களை நியாயவிலைக்கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்து இருந்தால் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது. புயல் வரும் என்று எச்சரிக்கை கொடுத்தும் அரசு மெத்தனமாக இருந்த காரணத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மக்களுக்கு உடனடியாக புயல் வருவதற்கு முன்பே ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications