வெள்ள மீட்பு: தமிழ்நாடு அரசு மீது புகார் சொல்வதா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!
திருநெல்வேலி: வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்து செயல்படவில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் புகார் தெரிவித்ததற்கு தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமான போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ) மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால்
எத்தனை வளங்கள் சரியாக தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று உள்ளதாக கவலை தெரிவித்தன என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தமிழ்நாடு அரசு மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தி அதில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைப்புடன் செயல்படவில்லை என குற்றம்சாட்டி இருப்பது கவனத்துக்கு வந்துள்ளது. பெருமழை வெள்ளம் தொடங்கியது முதலே அனைத்து துறைகளுடனும் தமிழ்நாடு அரசு நல்ல ஒருங்கிணைப்பில் இருந்து வந்தது. வானிலை ஆய்வு மையத்தினருடன் தொடர்பில் இருந்தோம். 1.14 கோடி பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் முப்படையினருடன் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளைப் பெற்றுள்ளோம். திருவனந்தபுரம், உதகையில் இருந்து 108 ராணுவ வீரர்கள் வருகை தந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 250 பேர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். இது எல்லாம் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைப்புடன் இருந்ததற்கு எடுத்துக் காட்டு. விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் 7 டன் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications