வெள்ள உபரி நீர்- தாமிரபரணி-கருமேனியாறு- நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தில் சோதனை ஓட்டம்-அடி தூள்!
சென்னை: கன்னடியன் அணைக்கட்டில் இருந்து வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் பரிசோதனை அடிப்படையில் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது . இந்த நிகழ்வில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டார்.
வடகிழக்குப் பருவமழை நடப்பு ஆண்டு வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டிப் போட்ட கனமழை தற்போது தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முதல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது. நேற்று இரவு முதல் விடாது பெய்து வரும் மழையால் தென் மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் உபரிநீரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சருடனும் நீர்வளத்துறை அலுவலர்களுடனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்தாலோசித்தார்.
இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், வேளாண் பெருமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி காலத்தில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு இந்த திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் பணிகள் முடிந்துள்ள சூழலில், தற்போது வடகிழக்குப் பருவமழையால் தொடர் மழை பெய்து வரும் நிலையில், உபரி நீரை, இந்த சோதனை ஓட்டத்திற்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் பயனடைய உள்ளனர்.
தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இத்திட்டத்தில் உபரிநரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் அவர்களிடமும் நீர்வளத்துறை அலுவலர்களுடனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசித்தார். இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்ட மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டார்.
இவ்வாறு உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம்செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், வேளாண் பெருமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், முதல்வர் உத்தரவையடுத்து சேரன்மாதேவி அருகே உள்ள வெள்ளங்குளி என்ற பகுதியில் கன்னடியன் அணைக்கட்டில் இருந்து வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் பரிசோதனை அடிப்படையில் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது .
சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்பாவு கூறியதாவது: கலைஞரின் கனவு திட்டமான நதிநீர் இணைப்பு திட்டத்தில் வெள்ளநீர் கால்வாயில் பரிசோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டபணி ரூ.989 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 3 சட்ட சபை தொகுதிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளும் பயன் பெறும்.
நெல்லை மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்கள், 2,657 கிணறுகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்கள், 2,563 கிணறுகள் என மொத்தம் 50 கிராமங்கள், 252 குளங்கள், 5,220 கிணறுகள் பயன் பெறும். விரைவில் இந்த திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்" என்றார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications