வெள்ளத்தால் மிதக்கும் 4 மாவட்டம்! நிவாரண பொருட்கள் வழங்க விருப்பமா? வாட்ஸ் அப் எண் வெளியிட்டது அரசு
சென்னை: தென் மாவட்டங்களில் அதி கன மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான வாட்ஸ் அப், தொடர்பு எண்களை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதலே கனமழை பெய்ய தொடங்கியது. விடாமல் சுமார் 38 மணி நேரமாக நிற்காமல் பெய்த மழையினால் மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. முக்கிய சாலைகள் ஆற்றங்கரையோர குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

குறிப்பாக தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் வசித்து வரும் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். பல்வேறு பகுதிகளில் குடியிருப்புக்குள் நீர் புகுந்தது. சில இடங்களில் வீடு இடிந்து விழுந்துள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது மழை குறைந்துள்ளது. ன மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான வாட்ஸ் அப், தொடர்பு எண்களை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்து வருவதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கலாம்.
அதாவது (ரொட்டி பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால் பவுடர், உலர் பழங்கள், மளிகை பொருட்கள், பாய்கள், போர்வைகள், துண்டுகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், லுங்கிகள், நைட்டிகள், நேப்கின் பேடுகள் உள்ளிட்டவை) வழங்க விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் கீழ்க்கண்ட வாட்ஸ்அப் அலைபேசி எண்ணில் (வாட்ஸ்அப் அலைபேசி எண்: 7397766651) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications