இன்னைக்கு நைட் ஜில் கிளைமேட் தான்! மொத்தம் 11 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை சற்றே குறைந்திருந்தது. பல பகுதிகளில் மெல்ல வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இரவு வெப்பம் கணிசமாகவே குறையும் என்றே பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்
தமிழ்நாட்டில் இந்தாண்டு வினோதமாக மே மாதமே பரவலாக மழை பெய்தது. பொதுவாக மே மாதம் வெயில் தான் உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்தாண்டு மழை வெளுத்து வாங்கியது. சென்னை தொடங்கி மாநிலம் முழுவதுமே மழை வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்கள் கோடை வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.

தமிழ்நாடு கிளைமேட்
அதன் பிறகு தென்மேற்கு பருவமழையும் தொடங்கிவிட்டதால் மாநிலத்தில் ஓரளவுக்கு நல்ல மழையே இருந்தது. குறிப்பாகக் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை இருந்தது. இதற்கிடையே கடந்த ஓரிரு நாட்களாகத் தமிழகத்தில் மழை மெல்லக் குறைந்திருந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்தே வந்தது.
அடுத்த 3 மணி நேரம்
இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
அதேபோல நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு பெய்யும் மழையால் சற்றே அதிகரித்தே வெப்பமும் குறையும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜூன் 21 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (19-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளைய தினம் (20-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications