இதெல்லாம் வெயிலே இல்ல..2003 ரெக்கார்டு தெரியுமா? இதுக்கு காரணம் இருக்கு! விடுமுறை நாயகன் ரமணன் பளிச்
சென்னை: ஆண்டுக்கு ஆண்டு வெயில் அதிகரித்து வருவதாக மக்கள் கூறினாலும் அது உண்மை இல்லை எனவும் சென்னையை பொருத்தவரை தற்போது பதிவாகி இருப்பது குறைந்தபட்ச வெப்பநிலை தான் எனக் கூறியிருக்கிறார் சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ரமணன் மேலும் தற்போது வெயில் அடிப்பதால் ஏற்படும் நன்மை குறித்தும் அவர் விளக்கி இருக்கிறார்.
தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை தொடுவது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது .தினமும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகி வருகிறது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

நேற்று தமிழகத்தில் 18 இடங்களில் வெயி சதமடித்த நிலையில், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கூடுதல் வெப்பநிலை இருக்கக்கூடும் எனவும், வரும் 4, 5, 6-ம் தேதிகளிலும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரமணன்: இந்நிலையில் ஆண்டுக்கு ஆண்டு வெயில் அதிகரித்து வருவதாக மக்கள் கூறினாலும் அது உண்மை இல்லை எனவும் சென்னையை பொருத்தவரை தற்போது பதிவாகி இருப்பது குறைந்தபட்ச வெப்பநிலை தான் எனக் கூறியிருக்கிறார் சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ரமணன் . இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்,"கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகம்.. இதுவரை இப்படி ஒரு வெயிலை பார்த்ததே இல்லை என மக்கள் அதிகம் சொல்வதைப் பார்க்க முடிகிறது..
உண்மை இல்லை: ஆனால் உண்மை அப்படி இல்லை.. தற்போது சென்னையை பொறுத்தவரை நிறைய பேர் ஏசி அறைகளுக்குள்ளும் நிழலுக்கு கீழேயும் வேலை செய்வதால் வெளியே வரும் போது வெப்பம் அதிகம் இருப்பதைப் போல உணர்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை.. தற்போது சென்னையில் 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தான் பதிவாகி வருகிறது. ஆனால் 2003 ஆம் ஆண்டு சென்னையில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது.
மழைக்கு வாய்ப்பு: இதுவரை அப்படி ஒரு வெப்பநிலை சென்னையில் பதிவானதில்லை. தமிழகத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் குறிப்பிட்ட அளவை வெப்ப நிலை இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட இது குறைவுதான். இவ்வாறு வெயில் அடிப்பதும் ஒரு வகையில் நன்மைதான் காரணம்.. வெயில் அதிகமாக இருக்கும் போது தமிழக பகுதிகளில் நிலப்பரப்பு வெப்பம் அடைகிறது. அதே நேரத்தில் ராஜஸ்தானில் தாழ்வு நிலை உருவாகி அதன் மூலம் தென்மேற்கு பருவக்காற்று வீசும் போது அது அப்பகுதியை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும்..
வாய்ப்பு அதிகம்: இது ஆண்டாண்டு காலமாய் நடந்து வருவது தான்.. அதே நேரத்தில் தற்போது வெப்ப அலை மட்டுமே அதீத வெப்பநிலையை உணர்வதற்கு காரணமாக இருக்கிறது. இவ்வாறு அதிக வெப்பநிலை உணரப்படும் போது அது கனமழைக்கு வாய்ப்பைத் தரும். எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications