இதெல்லாம் தமிழ்நாட்டில்தான் நடக்கும்! வெறும் 20 நாளில்! வானிலையில் என்னெல்லாம் நடக்குது பாருங்க-ஷாக்
சென்னை: தமிழ்நாட்டு வானிலையில் கடந்த 20 நாட்களில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் பல தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன. அதிலும் ஒரே மாநிலத்தில் இப்படி எல்லாம் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு தொடர் சம்பவங்கள் நடக்க தொடங்கி உள்ளன.
வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று முதல்நாள் ஆந்திராவுக்கு சென்று நெல்லூர், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.

சென்னை பாதிப்பு ஏன்?: சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் நகர தொடங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் புயலின் வேகம் 10 கிமீதான். அதாவது 1 மணி நேரத்திற்கு 10 கிமீ தூரம் மட்டுமே நகரும்.
அதே சமயம் இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதாவது கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் சென்னைக்கு வடக்கு திசையில் புயல் தூரமாக சென்றாலும் கிழக்கு திசையில் அது அருகில் இருந்து கொண்டே இருந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த புயல் கிட்டத்தட்ட 17 மணி நேரம் சென்னைக்கு அருகிலேயே இருந்தது. சென்னைக்கு அருகே 100 -200 கிமீ தூரத்திலேயே புயல் இருந்தது.
அதுதான் சென்னைக்கு பெரிய சிக்கலாகி மாறியது. 100 கிமீ தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இருந்தது. இதனால் கடுமையான மழை மேகங்களை சென்னையை நோக்கி கொண்டு வந்தது. மேலும் கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.
தென் மாவட்ட வெள்ளம்: இதேபோல்தான் கடந்த வாரம் தென் மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை புயல் உருவாகவில்லை. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கன்னியாகுமரிக்கு கீழே கடல் பகுதியில் நகராமல் நிலைகொண்டு இருந்தது. இதுதான் மழைக்கு காரணம்.
பொதுவாக.. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலுக்கு மேலே இருக்கும் போது கடலில் மிக கனமழையை கொடுக்கும். அதுவே நிலத்திற்கு அருகே இருக்கும் போது அது நிலத்தில் கனமழையை கொடுக்கும். அதுவே ஒருவேளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகராமல் ஒரே இடத்தில் இருந்தால் நிலப்பகுதியில் மிக மிக அதிக கனமழையை தரும்.
அதிலும் மேலடுக்கு சுழற்சியை விட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகராமல் ஒரே இடத்தில் குமரிக்கு அருகிலேயே இருந்தது. இதை வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை நோக்கி காற்று தொடர் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி பக்கத்தில் இருந்து வந்து பெரிய சுழற்சியை ஏற்படுத்தியதே.. 4 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்ய, வெள்ளம் ஏற்பட காரணம் ஆகும்.
வெள்ளத்திற்கு இடையே குளிர்; தமிழ்நாடு இப்படி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளத்திற்கு இடையே அதிர்ச்சி அளிக்கும் விதமாக நேற்று கடும் குளிர் வாட்டி எடுத்தது. குளிர் சாதாரண விஷயம் என்றாலும்.. நீலகிரியில் நடந்த சம்பவம் ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தலைகுந்தா கிராமத்தில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் உயரமான பகுதிகளில் அமைந்துள்ள கிராமத்தை வாட்டி வதைக்கும் கடும் குளிருக்கு இடையே இந்த குறைவான வெப்பநிலை பதிவாகி உள்ளது. தொடர்ந்து 3வது முறையாக நீலகிரியில் 0 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வெறும் 20 நாட்கள் இடைவெளியில் வேறு வேறு விதமான வானிலை மாற்றங்கள் மாநிலத்தில் பதிவாகி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications