ஜனவரியில் சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை.. சர்வதேச விஞ்ஞானிகளையே குழப்பிவிட்ட எல் நினோ, லா நினா!
டெல்லி: உலகளாவிய காலநிலையானது லா நினா எனப்படும் குளிர் அதிகமாக இருக்கும் காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் உலகிலேயே ஜனவரி மாதம்தான் வெப்பமான மாதம் என்கின்றனர் ஐரோப்பிய வல்லுநர்கள். சர்வதேச வானிலையானது அதிக வெப்ப நிலைக்கான எல் நினோவில் இருந்து லா நினா நோக்கி நகரும் நிலையில் இப்படி கடும் வெப்ப நிலை பதிவானது தொடர்பான விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
உலகம் முழுவதும் வானிலை மாற்றங்களுக்கு அடிப்படை காரணங்களாக எல் நினோ, லா நினா ஆகியவற்றை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுவது வழக்கம். வழக்கமான வெப்ப நிலையை விட சற்று அதிகமாக இருந்தால் எல் நினோ உருவாகி விட்டதாக கூறப்படும்; வழக்கமான வெப்ப நிலையை விட சற்று குறைவாக பதிவாகி இருந்தால் லா நினா உருவாகி இருக்கிறது எனவும் கூறப்படும். வெப்பநிலை அதிகமாக இருக்க எல் நினோவும் குளிராக இருக்க லா நினாவும் காரணம் என்பதுதான் இதன் சாராம்சம். பசிபிக் பெருங்கடலில் இவை இரண்டும் தாக்கத்தைப் பொறுத்தே உலக நாடுகளின் வெப்பநிலை மாறுதல்களும் இருந்து வருகின்றன.

உலக நாடுகளின் ஒப்பீட்டில் கடந்த ஜனவரி மாதம்தான் மிக அதிகமான வெப்பநிலை பதிவாகி இருக்கிறதாம். கடந்த 19 மாதங்களில் 18 மாதங்கள் நிலவிய சராசரியை விட ஜனவரி மாதம் 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவானது என்கின்றனர் ஐரோப்பிய விஞ்ஞானிகள்.
2024-ம் ஆண்டும் உலகின் மிக வெப்பமான ஆண்டாக இருந்ததற்கு கரணம் எல் நினோதான்.. தற்போது அதற்கு நேர் எதிரான குளிரான காலத்தை நோக்கி அதாவது லா நினா நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் விஞ்ஞானிகள். உலக நாடுகளில் எல் நினோவால் அதீதமான வெப்ப நிலை என்பது ஓராண்டுக்கு முன்னதாக இருந்தது. அவற்றை விட 1.75 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை ஜனவரியில் பதிவாகி இருக்கிறது.
பசிபிக் பெருங்கடலை குளிர்விக்கக் கூடிய லா நினா ஏற்கனவே உருவாகிவிட்டது; இதனால் வெப்பநிலை தாக்கம் குறையும் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையிலும் ஜனவரி மாதம் அதிகமான வெப்ப நிலை பதிவாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்தியாவைப் பொறுத்தவரை எல் நினோ காலத்தில் அதிகமான வெப்ப நிலை பதிவாகி பருவமழை குறைவாக இருக்கும்; லா நினா காலத்தில் அதீதமான மழைப் பொழிவு இருக்கும் என்பதுதான் கடந்த பல ஆண்டுகளாக வெளிப்பட்டிருக்கும் நிகழ்வுகள். அதாவது லா நினா காலத்தில் சராசரிக்கும் அதிகமான மழை இந்தியாவுக்கு கிடைக்கும். அதேபோல லா நினா காலத்தில் இந்தியாவில் குளிரின் அளவும் அதிகமாக இருக்கும். ஆக நமக்கு நடப்பாண்டில் மழையும் கொட்டும்; நம்மை கடும் குளிரும் வாட்டும் என்பதுதான் வானிலை முன்னோட்டம்!
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications