மக்களே ரெடியா! அடுத்த 2 மணி நேரம்! சென்னை உட்பட 16 மாவட்டங்களில் பிச்சு உதற போகுது மழை- வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உட்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தை வாட்டி வதைத்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் மோசமாக அவதிப்பட்டனர்.

Weather Chennai meteorological dept rain Chennai

இப்போது மாநிலத்தில் வெப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மெல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்தே வருகிறது.

16 மாவட்டங்களில் மழை: இதற்கிடையே அடுத்த 2 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது மாலை 7 மணி வரை ஈரோடு, நீலகிரி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கரூர், அரியலூர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் கவனமாகச் செல்லும்படி என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தவிர சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம்: முன்னதாக வரும் நாட்களில் என்ன மாதிரியான வானிலை நிலவும் என்பது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் நாட்கள்: நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 8 முதல் ஜூன் 13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+