அரசு பஸ்கள்.. சென்னையில் தாழ்வான பகுதியில் பஸ்களை நிறுத்தாதீங்க.. தமிழக போக்குவரத்து துறை உத்தரவு
சென்னை: சென்னையில் மழை காரணமாக, அத்தியாவசிய தேவைக்காக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னையில் மழை பெய்து வருவதால், கடுமையான அவதிக்கு ஆளாகி வருகின்றனர் பொதுமக்கள்.. இதே அளவுக்கு இன்று முழுவதும், மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது..

வானிலை மையம்: அந்தவகையில், நாளை காலை வரை மழை தொடரும் என்பதால், 25 செ.மீட்டர் அளவுக்கு கூடுதலாகவே மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், யாரும் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது..
நேற்று முதலே பலத்த மழை கொட்டி வருவதால், சென்னையே தனித்தீவு போல காணப்படுகிறது.. சாலைகளில் எல்லாம் நீர் பெருக்கெடுக்கிறது.. இடுப்பு வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. முக்கிய சாலைகள் மூழ்கியுள்ளன.. வாகனங்களுடன் பொதுமக்கள் நகரமுடியாமல் திணறி வருகிறார்கள்..
சுரங்க பாதை: ஏற்கனவே, சென்னையில் 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது... மேலும், கடந்த 2 நாட்களாகவே பெய்த கனமழையால், கிட்டத்தட்ட 15 இடங்களில் பெரிய அளவிலான மரங்கள் விழுந்துள்ளன.. எனவே, அவைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பஸ் சேவைகள் பெருமளவு குறைக்கப்பட்டன.. எனினும், அத்தியாவசிய தேவைக்காக, பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.. சென்னையில் ஒரு சில இடங்களில் பஸ்கள் இயங்கினாலும் 8 மணி வரை தற்காலிகமாக பஸ் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது..
திருவள்ளூர் மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி முழுமையாகவே பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.. புயலின் வேகம் ஓரளவு குறைந்ததுமே, பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை அரசு பேருந்துகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது..
தமிழக அரசு: இதுகுறித்து தமிழக போக்குவரத்துஅமைச்சர் சிவசங்கர் சொல்லும்போது, "சென்னையில் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இவைகளை நேரடியாக கண்காணித்து வருகிறோம்.. சென்னையில் தாழ்வான பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள அரசு பேருந்துகளை பாதுகாப்பான இடங்களுக்கு இடங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications