சென்னையில் கழுத்தளவு நீர்! பால் இல்லை! ஒரு குடும்பத்திற்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்! 2015 ரிட்டர்ன்ஸ்!
சென்னை: கழுத்தளவு நீரில் உண்ண உணவு இல்லாமல் உடுத்த உடை இல்லாமல், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் வடதமிழகம் வழியாக ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடந்தது. இந்த நிலையில் வடதமிழகமான சென்னை கடலோர பகுதிகளுக்கு அருகே புயல் நகர்ந்து சென்றதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மிக கனமழை பெய்தது.

நேற்று காலை சென்னைக்கு 100 கி.மீ. தொலைவில் புயல் இருந்த நிலையில் பயங்கர காற்று வீசியதால் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பேய் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளிலிருந்து தண்ணீர் 4 அல்லது 5 அடிக்கு தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். வேளச்சேரி அருகே கழுத்தளவு தண்ணீரால் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
முகப்பேர் பகுதியில் கூவம் ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம் காரணமாக ஆங்காங்கே இடுப்பளவு வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த சாலைகள் அடைக்கப்பட்டுவிட்டன. அந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் உணவு கிடைக்காமல் பால் கிடைக்காமல் மின்சாரம் இல்லாமல் செல்போன் டவர் இல்லாமல் கடும் அவதிப்பட்டனர்.
அந்த இடங்களில் தரை தளத்திற்கு தண்ணீர் வந்துவிட்டது. இதனால் அங்கிருந்த மோட்டார் மூழ்கி ஜெனரேட்டர் பயன்படுத்தக் கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்காத அபார்ட்மென்ட்களில் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. நேற்றைய தினம் பால் விநியோகத்தில் ரெகுலராக 3 பாக்கெட் வாங்குவோருக்கு 2 பாக்கெட்டுகள் போடப்பட்டன.
ஆனால் இன்று பால் கிடைக்கவில்லை. எந்த கடைகளுக்கு சென்றால் பால் இல்லை என்றே சொல்கிறார்கள். அது போல் காய்கறிகளும் சில இடங்களில் கிடைக்கவில்லை. செல்போன் டவர்கள் கிடைக்காததால் வெளியூரில் உள்ள நபர்கள் தொடர்பு கொள்ள முடியாமல் அச்சத்திலேயே இருந்தனர். 2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்த போது சென்னை எப்படி மிதந்ததோ அப்படித்தான் இன்றும் இருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனையான சம்பவம்.

வெளியூரிலிருந்து சென்னையின் வேளச்சேரி, கோவிலம்பாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி பணி செய்வோர் ஊர் திரும்ப காசு கூட இல்லாமல் அவதிப்பட்டனர். ஒரு சிலர் இடுப்பு அளவு தண்ணீர் இருக்கும் சூழலில் நீந்தி சாலைகளுக்கு வந்து அங்கிருந்த பேருந்து பிடித்து ஊர் சென்றனர். செல்போன் டவர் கிடைக்காமல் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் அவதியடைந்து வருவோரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரை தளத்தில்தான் தண்ணீர் என்றில்லை, 3 ஆவது தளத்தில் கூட பால்கனி வழியாக மழை நீர் வீடுகளுக்குள் வந்ததால் மக்கள் அவதியடைந்தனர். முகப்பேர், அமைந்தகரை, நொளம்பூர் உள்ளிட்ட இடங்களில் அதாவது தண்ணீர் இல்லாத இடங்களில் மின்சாரம் வந்துவிட்டது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications