மக்களே கவனமாக இருங்க! தமிழகத்தில் நாளை வெப்ப அலை வீச வாய்ப்பு.. பாலச்சந்திரன் மேஜர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நாளை பகல் நேரத்தில் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிமாக பதிவாக வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

Heat wave likely to hit interior districts of Tamil Nadu tomorrow Chennai Meteorological Centre

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. உக்கிர தாண்டவம் ஆடி வரும் வெயிலால் பகல் நேரத்தில் வெளியில் செல்வதற்கே அச்சப்படும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது. மதிய வேளையில் வெளியில் சென்றால் வியர்வையிலேயே குளித்து விடும் அளவுக்கு வெயிலின் தீவிரம் உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை, வேலூர் உள்ளிட்ட 13 இடங்களில் வெயில் சதம் அடித்து இருக்கிறது.

அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்) பதிவானது. இந்த நிலையில், அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிமாக பதிவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிமாக பதிவாக வாய்ப்புள்ளது. அதற்கு பின் இரண்டு தினங்களுக்கு பிறகு காற்றின் ஈரப்பதத்தின் அளவும் கிழக்கு திசை காற்றின் அளவும் கூடுகின்ற நிலை இருக்கும் போது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக குறையக் கூடும்.

வெப்ப அலையை பொறுத்தவரை நாளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், உள்ளிட்ட வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது. பொதுவாக பகல் நேர வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.

பகல் நேரத்தில் 11 மணியில் இருந்து 4 மணி வரை வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வெப்ப காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கைகள் என்னென்று கொடுக்கப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சூரியன் வெப்பம் நேரடியாக தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

முன்னதாக இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வட தமிழகத்தின் உள் மவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை வெப்ப அலை வீசக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 37-38 டிகிரி செல்சிசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக் கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை நாளை மற்றும் நாளை மறுநாள் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+