திருவள்ளூர் டூ தென்காசி.. 10 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! குடையை எடுத்துக்கோங்க மக்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது மழை தொடங்கியுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக மே மாதங்களில் தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திரமும் அப்போதுதான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு, அக்னி தொடங்கிய பின்னர் மழை கொட்டி தீர்த்தது. வெயில் சுத்தமாக இல்லை. கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் சென்னையில் வெயில் 40 டிகிரி செல்சிஸை தாண்டவில்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

rain tamil nadu chennai

அக்னி வெயிலே அடையாளம் தெரியாமல் போன நிலையில், அடுத்து வரும் நாட்களும் இதமாக இருக்கும் என மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் வெயில் ரிவெஞ்ச் எடுத்திருக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் அக்னி வெயிலுக்கு இணையாக வெப்பம் பதிவாகியிருந்தது. 101 டிகிரி பாரன்ஹீட் வரை கொளுத்தியது. இதனால் மக்கள் அசௌகரியம் அடைந்தனர்.

வானிலை மையமோ.. வெயில் அதிகரித்தால்தான் மழை பெய்யும் என்று கூறியது. அதாவது வெப்பச்சலனம் ஏற்பட்டு, அது கடலில் உருவாகும் ஈரப்பதம் மிக்க காற்றை உள்ளிழுத்து மழையாக பெய்ய வைக்கும். வானிலை மையம் சொன்னதை போலவே, சென்னையில் வெயில் கொளுத்திய நாட்களில், மாலையில் மழை பெய்ய தொடங்கியது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும் லேசான மழை கொஞ்சம் இதமாகவே இருந்தது.

இப்படி இருக்கையில் இன்று தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு மழை பரவலாக பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது,

திருவள்ளூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
கோயம்புத்தூர்
தேனி
திண்டுக்கல்
தென்காசி
திருநெல்வேலியில்

இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னதாக விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன்.10ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன்.11ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்ய பெய்யக்கூடும். கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன்.12ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன்.13ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+