அடுத்த 3 மணி நேரம்.. வெளுத்து வாங்க போகும் மழை.. 18 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: சென்னையில் இன்று மாலை மழை கொட்டிய நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்பட 18 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக காலை நேரங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கூட இன்று மாலை திடீரென மேகக்கூட்டங்கள் திரண்டு மழை கொட்டியது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை கொட்டியது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்
இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-"தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
இதேபோன்று நள்ளிரவு 1 மணி வரை செங்கல்பட்டு, திருச்சி, கரூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் ஒருசில இடங்களில், மற்றும் காரைக்காலில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் நிற அலர்ட் விடப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு வார அப்டேட்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 09-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். கடலூர், அரியலூர், மயிலாடுதுறை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 10 கிலோ - டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு சான்ஸ்
11-06-2025: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர். புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12-06-2025: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி
13-06-2025: கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
14-06-2025 மற்றும் 15-06-2025: கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications