திடீரென மாறிய சென்னை வானிலை.. இன்னைக்கு சம்பவம் இருக்கு! வெதர் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது வடக்கே வேலூர் தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னையை பொறுத்தவரை, சென்னையின் மேற்குப் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்கிறது.

அதேபோல், கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில இடங்களில் தீவிரமான மழை பதிவாகியுள்ளது. தென் தமிழ்நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் உள் பகுதிகளிலும், திருநெல்வேலியின் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. வடமேற்கு மற்றும் மேற்கு உள் தமிழகத்தின் மீதும் இடியுடன் கூடிய மழை தற்போது வலுப்பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications