சிவகங்கை, மதுரை தான் டார்கெட்.. சுத்து போட்ட மெகா சைஸ் ‘ஆரஞ்ச்’.! 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 7 மணி வரை மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஏப்ரல் - மே மாதங்களுக்கு இணையாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

செப்டம்பர் இறுதி வாரத்தில் இருந்து மழை தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தினமும் மழை பெய்து வருகிறது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை தினமும் ஒருமுறையாவது மழை பெய்கிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் இன்று இரவும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதே நேரத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி,திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 33 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணித்திருக்கிறது. இதே போல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை (அக். 12) வளிமண்டல சுழற்சி உருவாகிறது எனவும், வளிமண்டல சுழற்சி மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் எனவும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்திற்கான மழை அதிகரிக்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பொதுவாக டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் அதிக கன மழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு அதனை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாகவே அக்டோபர் 15ஆம் தேதி சென்னைக்கு கனமழை பாதிப்பு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறது.
மேலும் அந்த தேதியில் சென்னையில் மட்டும் 12 முதல் 20 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications