தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 9 மாவட்டங்கள் ரொம்ப முக்கியம்..இன்றைய வானிலை நிலவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது

வங்கக் கடலில் கடந்த 23 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் 26 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு அருகே வந்து புயலாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டது.

cyclone fengal chennai rain weather

ஆனால், காற்றின் திசை மாறுபாடு காரணமாக புயலாக மாறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் 29ஆம் தேதி அது புயலாக மாறியது. அதற்கு ஃபெஞ்சல் (fengal) என்று பெயரிடப்பட்டது. ஃபெஞ்சல் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்கும் அளவுக்கு வலு குறையத் தொடங்கியது.

எனினும், 29 ஆம் தேதி கரையைக் கடக்காமல் இரவு வரை போக்குக்காட்டியது. பின்னர் மரக்காணம் நோக்கி நகரத் தொடங்கியது. ஃபெஞ்சல் புயல் காரணமாக 3 இடங்களில் அதிக கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில் 51 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. புதுச்சேரியில் 49 செ.மீ மழை பதிவானது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கேரள கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+