அப்படிப் போடு 4 மாவட்டங்களை துவைக்கப் போகுது மழை..மொத்தம் 7 ஊர்க்காரங்களுக்கு செம குஷி! மெட் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தஞ்சை, திருவாரூர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், மயிலாடுதுறை, கடலூர், அரியலூரில் லேசான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை கை கொடுத்த நிலையில், அதற்கு பிறகு மழை வெகுவாக குறைந்தது. தொடர்ந்து ஜனவரி இறுதிப் பகுதியில் இருந்து வெயிலில் தாக்கம் அதிகரித்தது. தொடர்ந்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மூன்று மாதங்கள் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இடையில் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டல காரணமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில் தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழகத்தின் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. குறிப்பாக கரூர் மாவட்டம் பரமத்திலும் மதுரை ஏர்போர்ட் பகுதியிலும் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இது வழக்கத்தை விட 3.4 டிகிரி செல்சியஸ் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக திருச்சிராப்பள்ளியில் 40.1 டிகிரி செல்சியஸ், வேலூரில் 40 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. வட கடலோர மாவட்டங்களில் 34 முதல் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், தெற்கு கடலோரப் பகுதிகளில் 33 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி இருக்கிறது. வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக பல பகுதிகளில் மக்கள் அசௌகரியத்தை உணர்ந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னுடன் கூடிய லேசானது முதல் விதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கலாம்.
அதிக வெப்பநிலை அதிக ஈரப்பதம் காரணமாக ஒரு சில பகுதிகளில் அசெளகரிகம் ஏற்படலாம். சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications