ராமநாதபுரம் டூ குமரி வரை.. 5 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் முழுக்க மிதமான மழை பரவலாக பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் நவம்பர் முதல் இரு வாரத்தில் பெரிய மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில், தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும்.
இதேபோல் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு அதாவது 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 17 ஆம் தேதி செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
18 ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும். 15 ஆம் தேதிக்கு பிறகு பருவமழை தீவிரமடையும் என கூறப்பட்டுள்ளது. அதற்கடுத்த நாட்களில் வளிமண்டல சுழற்சிகள், காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications