டெல்லியில் கனமழை.. குளமாக மாறிய சாலைகள்.. உற்சாகமாக குதித்து விளையாடிய மக்கள்
டெல்லி: கொட்டித்தீர்த்த கனமழையால் டெல்லி சாலைகளில் பெருவெள்ளம் தேங்கியுள்ளது. குளமாக மாறிய சாலைகளில் டெல்லிவாசிகள் உற்சாகமாக குதித்து விளையாடி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கனமழையால் சாலைகள் உடைந்து துண்டிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும் இரவில் மழையும் மாறி மாறி பெய்து வந்தது. ஜூலை 12ஆம் தேதி வரை கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்திருந்தது. சனிக்கிழமையான இன்று காலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது. மின்டோ பிரிட்ஜ், மஜ்னு திலா, லுட்யன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நஜாஃப்கர், பாரத் தர்ஷன் பார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் குளம்போல மாறியுள்ளன. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் கார்கள் நீந்தியபடியே செல்கின்றன. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டெல்லி முழுவதும் உள்ள சுரங்கப் பாதைகளில் வாகனங்களை நிறுத்தி போலீசார் கண்காணித்து வரும் நிலையில், தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பெருமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications