படபடன்னு கொட்ட போகுது மழை.. அரபிக்கடலில் மீண்டும் "பூதம்".. வறண்ட வானிலை + உறைபனிக்கு நடுவே வார்னிங்
சென்னை: வறண்ட வானிலை ஆங்காங்கே நிலவி கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பலத்த மழையை தந்துவிட்டு போனது.. தமிழ்நாட்டில் மேட்டூர் தவிர மற்ற அனைத்து நீர் நிலைகளும், மழைப்பொழிவால் நிரம்பிவிட்டன...

அதிலும் தென் மாவட்டங்களிலும் மழைக்கு பஞ்சமேயில்லாமல் அடித்து ஊற்றியது.. ஒருகட்டத்தில், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு பாதிப்புகளை தந்து விட்டு போனது. தற்போது, வடகிழக்கு பருவமழை மெல்ல விடை பெற்று கொண்டிருக்கிறது.
வறண்ட வானிலை: எனவே, வறண்ட வானிலை தமிழ்நாட்டில் எட்டிப்பார்க்க துவங்கி உள்ளது.. அதேசமயம், பெரும்பாலான மாவட்டங்களில் கடும் குளிரும், பனி மூட்டம் நிலவுகிறது... நீலகிரியில் மைனஸ் டிகிரிக்கு உறைப்பனி போய்விட்டது. இப்படியே போனால், மைனஸ் டிகிரிக்கு கீழே போகவும் வாய்ப்பிருப்பாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். எப்படியும், நீலகிரியில் வரும் மார்ச் முதல்வாரம் வரை இந்த பனி நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், மேலும் சில மாவ5 மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. நேற்றுகூட, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
டெல்டா மாவட்டம்: இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதால், அடுத்த 2 நாட்களுக்கு, அதாவது இன்றும், நாளையும் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டமும், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வானிலை மையம்: நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனுடன் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications