வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்! "இந்த" ஏரியாவுலலாம் மழை வச்சு செய்ய போகுது! 5 நாளுக்கு எப்படி?
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை சாரல்களால் பூமியே குளிர்ந்து குளிர் நிலவுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நிலவுகிறது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை ஒடிசா மாநிலம் புரிக்கு அருகில் கரையை கடக்கக்கூடும்.

இதனால், இன்று ஓரிரு இடங்களில் இடி ,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 21 முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 19-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 22 செ.மீ., விண்ட்வொர்த் எஸ்டேட்டில் 13 செ.மீ., மேல்பவானியில்12 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 11 செ.மீ., நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 10 செ.மீ.,எமரால்டில் 9 செ.மீ., தேவாலா, பார்வூட், நடுவட்டம், கோவை மாவட்டம் வால்பாறை, சின்கோனாவில் 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் செருமுள்ளியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையில் கடந்த சில தினங்களாக சூரியனே வராமல் ஊமை வெயில் போல் இருந்தும், அவ்வப்போது தூரல் வந்து கொண்டும் இருந்தது. இதே நிலைதான் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கும். அது போல் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் மக்கள் மகிழ்ந்தனர். மேலும் ஆடி மாதம் பிறந்ததும் காற்று பயங்கரமாக வீசி வருகிறது. அது போல் மழையும் பெய்கிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications