தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. 18 ஆம் தேதி வரை மழை தொடரும்.. வானிலை அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வரும் 18 ஆம் தேதி வரை தமிழகம், புதுவையில் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இன்று முதல் 14 ஆம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று, தஞ்சை, திருவாரூர், கோவை, நீலகிரி, குமரி, தென்காசி, சென்னை, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இன்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வரும் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Weather Chennai Rain

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 13 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14-04-2025 முதல் 18-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் கிளைமேட் எப்படி?

* 12-04-2025 முதல் 14-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (12-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

* நாளை (13-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

* 12-04-2025 முதல் 14-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. 15-04-2025 மற்றும் 16-04-2025 : தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
* இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 12-04-2025 முதல் 14-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 12-04-2025 முதல் 14-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

* இன்று (12-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
* நாளை (13-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

* தமிழக கடலோரப்பகுதிகள்: 12-04-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 13-04-2025 முதல் 16-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

* வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்: 12-04-2025 முதல் 16-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழை அளவு (சென்டிமீட்டரில்):

* அரவக்குறிச்சி (கரூர்) 9,
* திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 8,
* நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர், காரைக்குடி (சிவகங்கை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), மன்னார்குடி (திருவாரூர், கீரனூர் (புதுக்கோட்டை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை) தலா 7,
* திருமானூர் (அரியலூர்), குருவாடி (அரியலூர்) 6,
* ராமேஸ்வரம் (ராமநாதபுரம், அறந்தாங்கி (புதுக்கோட்டை), கொடவாசல் (திருவாரூர்), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி) தலா 5,

* கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர், தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), சேலம் (சேலம்), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), பேராவூரணி (தஞ்சாவூர்), பூதலூர் (தஞ்சாவூர்), வலங்கைமான் (திருவாரூர்) தலா 4,
* ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), கிளானிலை (புதுக்கோட்டை), திருப்பத்தூர் (சிவகங்கை), கிருஷ்ணராயபுரம் (கரூர், செந்துறை (அரியலூர்), நாமக்கல் AWS (நாமக்கல்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கும்பகோணம் (தஞ்சாவூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி, குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), பாலமோர் (கன்னியாகுமரி, ஏற்காடு (சேலம்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி) தலா 3 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+