Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த 1 மணி நேரம்.. தமிழகம் முழுக்க விட்டு விளாசப் போகுது கனமழை.. 34 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில் இனி அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இன்று மட்டும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் இன்று இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இன்று மதியத்திற்கு பிறகு பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், மதியத்திற்கு பிறகு திடீரென மேகக் கூட்டங்கள் கூடி பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

heavy-rain-likely-in-34-districts-across-tamil-nadu-in-the-next-1-hour

குளிர்ச்சியான சூழல்

இதேபோல் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கோவை, தென்காசி என பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சென்னையில் பெய்த மழையின் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. வரும் நாட்களில் அதாவது வரும் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும், கோவை மற்றும் நீலகிரியில் மீண்டும் அதி கனமழை கொட்டும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இதற்கிடையே தமிழகம் முழுக்க இன்று இரவு கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது அடுத்த 1 மணி நேரம், சென்னை, செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுக்க 34 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

34 மாவட்டங்களுக்கு அலர்ட்

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், சிவகங்கை, நாமக்கல், கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, திருப்பூர், நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 21 மாவட்டங்களில் கனமழைக்கும் திருவள்ளூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, தஞ்சை, தேனி, கரூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரியில் அதி கனமழைக்கு சான்ஸ்

முன்னதாக வானிலை அறிவிப்பில் கூறபப்ட்டிருந்ததாவது:- "13-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, இண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

14-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16 ஆம் தேதி வரை மழை தொடரும்

15-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (10-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (11-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: 10-06-2025 முதல் 14-06-2025 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

10-06-2025: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 11-06-2025 முதல் 14-06-2025 வரை: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

10-06-2025 மற்றும் 11-06-2025: தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 12-06-2025: தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன்-கோவா-கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு-மாலத்தீவு பகுதிகளில் குறாவளிக்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

13-06-2025 மற்றும் 14-06-2025: தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்-கோவா-கர்நாடகா கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு. மாலத்தீவு பகுதிகளில் குறாவளிக்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+