வெயிலுக்கு "டாட்டா பாய் பாய்" இந்த 9 மாவட்டங்களுக்கு குளு குளு தான்.. கனமழை கொட்ட போகுது.. வானிலை
சென்னை: தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை படிப்படியாக குறையும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடைக்கால சீசன் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இதனால் வெயில் வாட்டி வதைக்கும் என மக்கள் அச்சப்பட்ட சமயத்தில், இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இன்று 9 மாவட்டங்கள் டார்கெட்
இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:- தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை வரும் நாட்களில் வெயில் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது குறிப்பாக இன்று கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று சென்னையில் இன்று ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு வார அப்டேட்
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஒரு வாரத்திற்கான அப்டேட்டில் கூறியிருப்பதாவது:-
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமக இன்று 04-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், அரியலூர், பெரம்பலூர், கருர், திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 4 மாவட்டங்களில் கனமழை
* நாளை 5 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10 ஆம் தெதி வரை
* 06-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* 07-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 08-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 09-05-2025 மற்றும் 10-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (04-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (05-05-2025) சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு (செமீ):
கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), கடலூர் (கடலூர்), மேல் பவானி (நீலகிரி) தலா 1.
வெப்பநிலை நிலவரம்:
* அதிகபட்ச வெப்பநிலை :- வேலூர்: 41.0° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):-கரூர் பரமத்தி: 23.0° செல்சியஸ்
* கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 1-3° செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. ஏனைய தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
* தமிழகம் மற்றும் புதுவை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
* வட தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-41° செல்சியஸ், தென் தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-39° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-39° செல்சியஸ், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 34-35° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 22-27° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
* 04-05-2025 மற்றும் 05-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
* 06-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
* 04-05-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
04-05-2025 முதல் 08-05-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிபடியாக குறையக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: எதுவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications