சென்னையில் இன்று நடக்கும் சம்பவம்! இந்த மாவட்டங்களுக்கு எல்லாம் மழை! தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்
சென்னை: இன்று இரவு சென்னையிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை மையம் தமிழ்நாட்டிற்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 21.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 23.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.08.2023 முதல் 27.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
நம்பியூர் (ஈரோடு) 3, கூடலூர் பார் (நீலகிரி) 2, மேல் கூடலூர் (நீலகிரி), தலைவாசல் (சேலம்), கொத்தவாச்சேரி (கடலூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), ஹரிசன் மலையாளம் லிமிடெட், செருமல்லி (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
21.08.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
வெதர்மேன்: இந்த நிலையில்தான் இன்று இரவு சென்னையிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் சென்னையில் இன்று இரவு முதல் காலை வரை பரவலாக மழை பெய்யும். டெல்டா, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், மலை, கடலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் போன்ற பிற மாவட்டங்களிலும் மழை பெய்யும். ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானலில் நல்ல மழை பெய்யும், என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications