Heavy Rain: வெயிலே இருக்காது.. அடுத்த 2 மணி நேரம் விடாமல் கொட்டப்போகும் மழை.. நெல்லை, தென்காசி, குமரிக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் (Heavy Rain Update) அடுத்த 2 மணி நேரத்திற்கு வெயிலே இருக்காது, மழை விடாமல் கொளுத்தும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரியில் கனமழை கொட்டி வருகிறது. எனினும் ஒரு சில இடங்களில் வெயிலும் கடுமையாக அடித்து வருகிறது.

அடுத்த 2 மணி நேரம்
இந்த நிலையில் தான் அடுத்த 2 மணி நேரத்தில் வெயிலே இருக்காது, விடாமல் மழை வெளுக்கும் என 3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரம் அதாவது இன்று மதியம் 1 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியிருந்ததாவது:-
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று 30-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 31-08-2025 முதல் 04-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்ற காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (30-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
பதிவான மழை அளவு செமீ:
* தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 15,
* விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 12,
* சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி) தலா 10,
* மேல் கூடலூர் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 7,
* கூடலூர் பஜார் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 6,
* செருமுள்ளி (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), ஆட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) தலா 5,
* (நீலகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), கிளன்மார்கள் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்) தலா 3.
* எமரால்டு (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), பெரியாறு (தேனி), உதகமண்டலம் (நீலகிரி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), ஏற்காடு (சேலம்), கோடநாடு (நீலகிரி) தலா 2,
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 30-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
31-08-2025 முதல் 02-09-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications