புயல் ஓய்ந்தும் ஓயாத மழை.. 19 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: வங்கக்கடலில் உருவான புயல் சின்னம், நேற்று அதிகாலை கரையை கடந்தது. இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்திருந்தாலும், மழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் வந்துவிட்டாலே, சென்னை மக்கள் டென்ஷனாகி விடுகிறார்கள். காரணம் மழையின் பாதிப்புதான். இந்த ஆண்டும் புயல் சென்னைக்கு நெருக்கமாக வந்திருந்தது. ஃபெஞ்சல் என பெயரிடப்பட்ட இந்த புயல் நேற்று அதிகாலை மாமல்லபுரத்துக்கும்-புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. வழக்கமாக புயல் கரையை கடந்துவிட்டால் மழையின் தீவிரம் குறைந்துவிடும். ஆனால் இந்த முறை மழையின் தீவிரம் குறையாமல் அதிகரித்தது.

குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தீவிரம் மிக அதிகமாக இருந்தது. கிருஷ்ணகிரியில் நேற்று ஒரே நாளில் சுமார் 51 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருந்தது. இதனால் அரூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதியில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது. விழுப்புரத்திலும் 50 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருந்ததால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது.
விழுப்புரம் மாவட்டம் அரசூரில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் அரசூருக்கு முன்பே நிறுத்தப்பட்டன. அதேபோல திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்களும் பாதியில் நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. ரயில் போக்குவரத்தும் விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்பட்டது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் காட்பாடி அரக்கோணம் வழியாக சென்னை வந்து சேர்ந்திருக்கின்றன.
இன்று இரவு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்கள் சற்று தாமதமாக புறப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயண திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில், அதாவது இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
கடலூர்
பெரம்பலூர்
அரியலூர்
ஈரோடு
கோவை
சிவகங்கை
நாமக்கல்
கரூர்
ராணிப்பேட்டை
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தருமபுரி
சேலம்
திருப்பூர்
ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications