டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை.. ஒரே இரவில் 81 மிமீ மழை பதிவு.. 200 விமான சேவைகள் பாதிப்பு..
டெல்லி: டெல்லியில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை வெளுத்து வாங்கிய கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. சுமார் 200 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயில் குறைந்து இதமான சூழல் நிலவி வந்தது. அவ்வப்போது சில இடங்களில் மழையும் பெய்தது.

இந்நிலையில் தான் நேற்று இரவு சூறை்காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த கனமழை இன்று அதிகாலை வரை நீடித்தது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவின்படி டெல்லியில் சப்தர்ஜங் (விமானநிலையம்) பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் மணிக்கு 82 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அதேபோல் பிரகதி தைமான் பகுதியில் மணிக்கு 76 கிமீ வேகத்திலும், டெல்லி பல்கலைக்கழக பகுதியில் மணிக்கு 37 கிமீ வேகத்திலும் சூறைக்காற்று வீசியதோடு, கனமழை கொட்டித்தீர்த்தது.
அதன்படி சப்தர்ஜங் பகுதியில் 81 மில்லி மீட்டர், புசாவில் 71 மில்லி மீட்டர், பாலம்பகுதியில் 68 மில்லி மீட்டர், மயூர் விகார் பகுதியில் 48 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதுதவிர டெல்லியின் பிற இடங்களில் குறைந்தபட்சம் 5 மில்லி மீட்டர் முதல் அதிகபட்சமாக 8 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருந்தது.
தாழ்வான இடங்களிலும், சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். குறிப்பாக டெல்லி விமான நிலையத்தை இணைக்கும் சாலைகளில் உள்ள சுரங்க பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றதால் வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. மிண்டோ ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த கார் தண்ணீரில்மூழ்கியது.
அதுமட்டுமின்றி சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின்போது மரக்கிளைகள் முறிந்து விழுந்து 12க்கும் அதிகமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து போலீஸ் அதிகாரி பலியாகி உள்ளனர்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications