8 மாவட்டங்களில் கனமழை.. நாளை பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்.. குடை, ரெயின் கோட் எடுத்துக்கோங்க!
சென்னை: தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை பள்ளி மாணவர்களுக்கு மழையின் அளவை பொறுத்து விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை மழை பெய்யவில்லை என்றாலும், மாணவர்கள் குடை மற்றும் ரெயின் கோட் ஆகியவற்றுடன் பள்ளிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அண்மையில் டிட்வா புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக அரையாண்டு தேர்வு நெருங்கிவிட்ட சூழலில், பள்ளிகளுக்கு மழையால் தொடர்ந்து விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கும் மேலாக விடுமுறை அளிக்கப்பட்டன. தற்போது டிட்வா புயல் வலுவிழந்த சூழலில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மட்டும் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக டிசம்பர் 9 முதல் 13 வரை மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10 முதல் 13 வரை தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டௌள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இரவு முழுக்க தொடரும் பட்சத்தில், நாளை இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் அளவை பொறுத்து விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இல்லையென்றால், மாணவர்கள் குடை மற்றும் ரெயின் கோட்டுடன் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications