சென்னையில் இரவு முழுக்க டமால் டுமீல்.. கொட்டி தீர்த்த கனமழை.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி மற்றும் மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. சென்னையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மதுரை, புதுக்கோட்டை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அதே போல் கோவை, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே சென்னையில் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை ராமபுரம், பள்ளிக்கரணை, அனகாபுத்தூர், கிண்டி, அடையாறு பகுதிகளில் மழை பெய்கிறது. அசோக்நகர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், அம்பத்தூர், குரோம்பேட்டையில் மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
விடுமுறை நாட்கள் முடிந்து சென்னைக்கு சொந்த வாகனங்களில் திரும்பிய மக்கள் மழை மற்றும் போக்குவரத்து நெரிசலால் சிரமமடைந்தனர். இதேபோல் நேற்று கோவையிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்தது. ஒருசில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர்.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 33-34 டிகிரி செல்சியை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications