Chennai rain: மழை வருது, மழை வருது, குடை கொண்டு வா..! இடி மின்னலுடன் சென்னையை குளிர்வித்த மழை!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இந்த மழை பெய்ததாக சொல்லப்படுகிறது. காலை முதலே வெப்பம் தகித்து வந்த நிலையில் மாலையில் பெய்த மழை குளிர்ச்சியை தந்துள்ளது.
சென்னையில் கடந்த வாரம் எல்லாம் மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.

பின்னர் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மாங்காடு, போரூர், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அது போல் அண்ணா நகர், முகப்பேர், கிண்டி, அசோக் நகர், கோயம்பேடு, வடபழனி, அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அது போல் சென்னை ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, மாதவரம், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 100.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. வெப்பம் தகித்த நிலையில் மழை பெய்ததால் சென்னையில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வடக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத், கொங்கன், கோவா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications