நோட் பண்ணிக்கோங்க! கொட்டித் தீர்க்கும் கனமழை.. அவசர உதவி எண்கள் அறிவித்தது சென்னை மாநகராட்சி!
சென்னை: சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவித்தது சென்னை மாநகராட்சி. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தீபாவளி அன்றும், அதற்கு முந்தைய நாளும் பெரிய அளவில் மழை இல்லாமல் இருந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, நவம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று தொடங்கிய கனமழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது.
சென்னையில் தரமணி, வேளச்சேரி, ராயப்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், திருவல்லிக்கேணி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை, எழும்பூர், சேத்துப்பட்டு, புதுப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று அதிக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், அரியலூர், நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், 1913 என்ற இலவச உதவி எண்ணை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். 044 25619206, 044 25619207, 044 25619208 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும்போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹேஷ்டேக்கை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வாட்ஸ் அப் வாயிலாக 94454 77205 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications