நான் ஸ்டாப்பாக கொட்டித் தீர்க்கும் கனமழை.. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் சரவெடி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழையும், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பாதிகளில் ஒரிக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்தது.
அதன்படி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்றும் மழை பெய்தது. தொடர்ந்து இரவு முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டியது. திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளில் 33 செ.மீ மழை பதிவானது. கயத்தாறு, எட்டயபுரம் பகுதிகளில் இன்றும் சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.
மேலும், நெல்லை மாவட்டத்தின் தென் பகுதிகள் உட்பட பல பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தபோதும், மழை பெரிய அளவில் பெய்யாமல் இருந்து வந்த மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!











Click it and Unblock the Notifications