விளாசி எடுக்கும் கனமழை.. வேகமாக கிளம்பிய சிவதாஸ் மீனா.. ஸ்டன் ஆன அதிகாரிகள்.. பரபர சம்பவம்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் முக்கியமாக சென்னையில் மழை தீவிரம் அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை மையம் மூலம் விடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி திருப்பத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று காலை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை தொடக்கம்: வடகிழக்கு பருவமழை அன்று தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் 03.11.2023 முதல் 06.11.2023 முடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. சிவதாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்து வடகிழக்கு பருவமழை குறித்து நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை: 21.10.2023 தமிழ்நாட்டில், 01.10.2023 முதல் 02.11.2023 வரை 110.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 40 விழுக்காடு குறைவு ஆகும்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 02.11.2023 முடிய, 1 மாவட்டத்தில் அதிகமான மழைப்பொழிவும், 30 மழைப்பொழிவும், 7 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. மாவட்டங்களில் குறைவான இயல்பான மழைப்பொழிவும் இன்று (03.11.2023) காலை 8.30 மணி முடிய 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், மாஞ்சோலை மற்றும் காக்காச்சி பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலை நகர் பகுதியிலும் கனமழை பதிவாகியுள்ளது. மாநில / மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 தொலைபேசிகளுடனும், வருகின்றன. மற்றும் 1077 கூடுதலான என்ற கட்டணமில்லா அலுவலர்களுடனும் இயங்கி பொதுமக்கள், Whatsapp எண்.94458-69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.
பரபரப்பு ஆய்வு: TNSMART இணைய தளம் மூலமாக சேகரிக்கப்படும் மழை. நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு. பேரிடர்களால் ஏற்படும் சேதங்கள் குறித்து விளக்கப்பட்டது. பேரிடர் காலங்களில் பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) வாயிலாக பொதுமக்களுக்கு கைபேசி மூலம் வழங்கப்படும் எச்சரிக்கை குறித்தும், கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் வாயிலாக எச்சரிக்கை செய்திகள் ஒலிபரப்பப்படுவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளான வைகை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர் அணைகளிலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களான செங்குன்றம், செம்பரம்பாக்கம் மற்றும் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்களில் 75 விழுக்காடுக்கு மேல் நீர் இருப்பு உள்ளதும் தெரிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
03.11.2023 முதல் 06.11.2023 முடிய கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களிடம் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து காணொலி மூலமாக தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.
தலைமைச் செயலாளர் அவர்களது ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் திரு எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர், திரு சி.அ.ராமன், இ.ஆ.ப., ஆகியோர் உடன் இருந்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications