வெளுத்து வாங்கும் கனமழை.. திருப்பூர், கோவையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்.. மாவட்ட ஆட்சியர்கள்
கோவை: கோவையில் இன்று (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேபோல் திருப்பூரிலும் இன்று (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருப்பூர், கோவையில் இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் மழை நேற்று நள்ளிரவு வரை பெய்ததாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை துவக்கத்தில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. பருவமழை ஆரம்பிக்கும் போதே சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோவை, திருப்பூரில் கனமழை வெளுத்து வாங்கியது.
நேற்று மாலையில் கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. தென்காசியில் சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. கோவையில் பல்வேறு இடங்களில் மழையின் காரணமாக வெள்ளம் தேங்கி நிற்கிறது. தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதான வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
குறிப்பாக கோவையில் நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் கோவையில் இன்றும் புதன்கிழமையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதி இன்று புதன்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோவையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார். இதேபோன்று திருப்பூரிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அம்மாவட்ட ஆட்சியரும், இன்று புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். தொடர்ந்து கனமழை விடாமல் பெய்து வருவதாலும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் கிற்ஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications