Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேய் மழை வெளுக்கப் போகுது! வங்கக் கடலில் வலுவாகும் பூதம்! இன்னும் ஒரு வாரத்துக்கு சம்பவம் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக உருவாகி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இன்று இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று, நாளைக்குள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் நிலவி வந்தது. குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைந்து மக்களுக்கு கடும் குளிர் தாக்கம் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை ஓரளவு தணிந்து வருகிறது.

weather rain chennai rain

இதோடு தமிழகத்தில் பல மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மற்றும் மிதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பதிவாகியுள்ளது.

இதனால் அப்பகுதிகளில் நிலவும் குளிர் சற்று தணிந்து, இனிமையான காலநிலை உருவாகியுள்ளது.இந்நிலையில் உருவான தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) மழை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும்; புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை ஏற்படும். குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை ஏற்படலாம் என வானிலை துறை அறிவித்துள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கு நெருங்கி வருவதால், கடலோர பகுதிகளில் உள்ள 9 துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அவை சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களாகும்.

மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பது பாதுகாப்பு கருதி அவசியம் எனவும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வானிலைத் துறையின் அறிவுரைகளை கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில், வருகிற இரண்டு நாட்கள் தமிழக கடலோர பகுதிகளில் மழை வாய்ப்பு அதிகரிப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+