தென் மாவட்டங்களை பதம் பார்க்கும் கனமழை.. அலர்ட் மோடில் காவல்துறை.. கண்காணிப்பு குழு அமைப்பு
சென்னை: தென்மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மீட்பு உள்ளிட்ட பணிகளில் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயல்பட காவல்துறை தரப்பிலும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதையொட்டி நெல்லையில் நேற்று இரவு விடிய, விடிய லேசான மழை பெய்தது. இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை பெய்தது. சிறிது நேரம் இடைவௌிக்கு பிறகு மீண்டும் கனமழை கொட்டியது.

இந்த மழை ஒரு நொடி கூட இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. பகல் முழுவதும் கன மழை கொட்டிக் கொண்டே இருந்தது. இதே போல் நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மிக கன மழை பெய்தது.
மணிமுத்தாறு அணை மற்றும் அருவியின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் தேயிலை தோட்ட பகுதிகளான மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து மற்றும் காக்காச்சி பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிவாரணப் பணி மேற்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சேதங்களை தவிர்க்கவும் அரசு பல்வேஎறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், மாவட்ட நிர்வாகம், மாநகாரட்சி நிர்வாகம், காவல் துறை நிர்வாகம் ஒருங்கிணைந்து இந்த துயர் துடைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை முதல் தற்போது வரை சராசரியாக 28 செ.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டி பகுதியில் 395 மி.மீ. மழையும், குறைந்தளவாக சேர்வவாறு பகுதியில் 178 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது" என்றார்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ள பாதிப்பு தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை சார்பாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அணைகளின் நீர் வெளியேற்றம், வெள்ள நிவாரண பணிகளை மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து இந்தக்குழு கண்காணிக்கும். தாழ்வான பகுதிகள், தண்ணீர் தேங்கும் பகுதிகள், நிவாரண மையங்களை அடையாளம் காண இந்தக் குழு நடவடிக்கை எடுக்கும். ஐபிஎஸ் அதிகாரிகள் விவரம் வருமாறு:-
* நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மீட்பு பணிகளை தென் மண்டல காவல் தலைவர் நரேந்திர நாயர் கண்காணிப்பார்.
* குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகரியாக நெல்லை சரக காவல்துறை பிரவேஷ் குமார் நியமனம்.
* நெல்லை மாவட்ட மீட்பு பணிகளை கண்காணிக்க மாநகர காவல் ஆணையர் மகெஷ்வரி ஐபிஎஸ் நியமனம்.
* தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் எம்.துரை நியமனம்.
* தென்காசி மாவட்ட காண்காணிப்பு அதிகாரியாக திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் அபினவ் குமார் நியமனம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications