வானம் வெடித்து சிதறியது போல ஒரே நாளில் ஒரு வருஷத்து 93 செ.மீ. மழை! கதி கலங்கிப் போனதே காயல்பட்டினம்!
காயல்பட்டினம்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தமிழ்நாட்டின் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 93 செ.மீ மழை வெளுத்து கொட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குமரிக் கடலில் நிலை கொண்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை வெள்ளத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டது. தமிழ்நாட்டின் வரலாறு காணாத வகையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை கதிகலங்க வைத்திருக்கிறது ஒரே நாளில் கொட்டித் தீர்த்த 93 செ.மீ. மழை.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் 50 செ.மீ. மழை பல வாரங்களாக தத்தளிக்க வைத்துள்ள நிலையில் காயல்பட்டினம் எப்படி 93 செ.மீ மழையை தாங்க முடியும் என்பதுதான் அனைவரது கேள்வியாக இருக்கிறது.
காயல்பட்டினமானது கடலுக்கு மிக அருகில் இருக்கக் கூடிய நகரம்தான். ஆனால் 60க்கும் மேற்பட்ட பெரிய குளங்களைக் கொண்ட நகரமாக உருவாகி இருந்தது. இன்னொரு பக்கம் காயல்பட்டினத்தின் வீடுகள் கட்டமைப்பானது பெருமளவு நீர் வெளியேறக் கூடிய சாத்தியமற்ற கட்டமைப்புகளையும் கொண்டது. அண்மைக்காலமாக குளங்களை காவு கொண்ட இதர பகுதிகளைப் போல காயல்பட்டினமும் உருமாறிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் ஒரே நாளில் 93 செ.மீ மழை வெளுத்தெடுத்து காயல்பட்டினத்தை கதிகலங்க வைத்துள்ளது. காயல்பட்டினத்தில் பெரும்பாலான வீடுகளின் தரைத்தளம் மூழ்கிக் கிடக்கின்றன. என்னதான் குளங்கள் நிரம்பி வழிந்தாலும் என்னதான் கடலுக்கு அருகே இருந்தாலும் குடியிருப்புகள் அத்தனையும் பெருமழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காயல்பட்டினத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில்தான் புன்னைக்காயல் உள்ளது. இங்குதான் தற்போது 1 லட்சம் கன அடிநீரோடு பாய்ந்து வரும் தாமிரபரணி நதி கடலில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications