அடுத்த 2 மணி நேரம்.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களில் விளாசப் போகுது மழை.. வானிலை மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், தஞ்சை, பெரம்பலூர், சேலம், திருச்சி, விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சிவகங்கை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்தது. பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. சென்னையிலும் இன்று வெயில் கொளுத்தி எடுத்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

heavy-rains-to-lash-22-districts-across-tamil-nadu-in-the-next-2-hours-weather-department-issues-a

10 மணி வரை மழைக்கு சான்ஸ்

"தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 10 மணி வரை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், விழுப்புரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருச்சி, விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

30 ஆம் தேதி வரை மழை தான்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று (24-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையில் நாளை (25-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழை அளவு (செமீ):

* அறந்தாங்கி (புதுக்கோட்டை) 5.
* பரமக்குடி (ராமநாதபுரம்), இளையாங்குடி (சிவகங்கை) 4.
* விருதுநகர் (விருதுநகர்), சாத்தியார் (மதுரை), கல்லந்திரி (மதுரை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சிட்டம்பட்டி (மதுரை) தலா 3,
* தேவகோட்டை (சிவகங்கை), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), மேட்டுப்பட்டி (மதுரை). கூடலூர் பஜார் (நீலகிரி), மிமிசல் (புதுக்கோட்டை), மேல் கூடலூர் (நீலகிரி), ஆயிங்குடி (புதுக்கோட்டை) தலா 2.

* வட்டானம் (ராமநாதபுரம்), மதுரை வடக்கு (மதுரை), மதுரை நகரம் (மதுரை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), தல்லாகுளம் (மதுரை), காட்பாடி (வேலூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்). பெரியபட்டி (மதுரை), சிவகாசி (விருதுநகர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), செருமுள்ளி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), மானாமதுரை (சிவகங்கை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), அம்முண்டி (வேலூர்), ஓமலூர் (சேலம்), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), கடலாடி (ராமநாதபுரம்), தொண்டி (ராமநாதபுரம்) தலா 1.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+