Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடசென்னையில் வானிலிருந்து கொட்டிய வாட்டர்ஃபால்ஸ்! ஆகஸ்ட் மாதத்தில் இப்படி நடந்ததே இல்லை! வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடசென்னையில் நள்ளிரவு பெய்த மழை மேகவெடிப்பு மழை என்றும் ஆகஸ்ட் மாதம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மழையை கொடுத்துள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னைக்கு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஆகஸ்ட்டாக இது உள்ளது. இந்த ஒரே மாதத்தில் 3 முதல் 100 மி.மீ. மழை பெய்துள்ளது. ஒரே மாதத்தில் அதிலும் ஆகஸ்ட் 22, 23, 31 ஆகிய தினங்களில் பெய்த மழையால் முதல்முறையாக இந்த சாதனை படைத்துள்ளது.

weather rain tamil nadu weatherman

இது போன்றதொரு மழை சென்னையில் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை பதிவானதில்லை. வடசென்னையில் இன்று பெய்த மழை, மேகவெடிப்பு மழையை போல் இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதாவது காலை 8.30 மணி நிலவரப்படி வடசென்னை முழுக்க வானில் இருந்து நீர் வீழ்ச்சி கொட்டியது போல் இருந்தது என குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.

மேகவெடிப்பு

இந்திய வானிலை மையத்தின் கூற்றுப்படி, ஒரு மணி நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் அதாவது 20 முதல் 30 சதுர கி.மீ. பரப்பில் 100 மி.மீ. மழை பெய்தால் அது மேகவெடிப்பு ஆகும். எனவே வடசென்னையிலும் இது போன்ற சம்பவம் நடந்ததால், இதுவும் மேகவெடிப்பு மழைதான்.

140 மி.மீ. மழை

சென்னையில் ஆகஸ்ட் மாதம் இயல்பான மழையின் அளவு 140 மி.மீ. ஆகும். நுங்கம்பாக்கத்தில் இந்த மாதம் மட்டுமே 200 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் சென்னை மழை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

கொரட்டூரில் கொட்டிய மழை

ஆகஸ்ட் 30 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி காலை 8.30 வரை சென்னையில் பல்வேறு இடங்களில் பதிவான மழையை பார்க்கலாம். கொரட்டூரில் 182.4 மி.மீ., மணலியில் 158.8, கத்திவாக்கத்தில் 136.5, திருவொற்றியூரில் 126, அயப்பாக்கத்தில் 121.8 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

பாரிமுனையில் எவ்வளவு மழை

பாரிமுனையில் 115.5 மி.மீ. மழையும், அம்பத்தூரில் 112.2 மி.மீ. மழையும், நெற்குன்றத்தில் 110.4 மி.மீ., தண்டையார்பேட்டையில் 102.4 மி.மீ., கொளத்தூரில் 96.6, அயனாவரத்தில் 96, காசிமேட்டில் 95.1. மி.மீ, வளசரவாக்கத்தில் 91.2 மி.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 81.9 மி.மீ., பெரம்பூரில் 81.2, அமைந்தகரையில் 79.2, அண்ணாநகர் மேற்கில் 75.6, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 73.2, மத்திய சென்னையில் 63.6 மி.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இரு நாளாக மழை

கடந்த இரு தினங்களாக தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிலும் குறிப்பாக வால்பாறை, நெல்லை, குமரி, ஈரோடு, தேனி, நீலகிரி, மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

மழை ஏன்

இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 31-08-2025 முதல் 01-09-2025 வரை:தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வரும் வாரம் எப்படி

02-09-2025 முதல் 05-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+