Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி..இதே டிசம்பர் 16-18-ல் இதே இடங்களில் வரலாறு காணாத வெள்ளம்-ஆச்சரியம்!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தற்போது திருநெல்வேலியை புரட்டிப் போட்ட தாமிரபரணி பெருவெள்ளம் இதே தேதிகளில் இதே இடங்களில் இதே பாதிப்புகளுடன் 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923-ம் ஆண்டு நிகழ்ந்தது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று ஆச்சரியம்!

குமரிக் கடல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 மாவட்டங்களில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது. இப்பெருமழை வெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் திருநெல்வேலி மாவட்டம் மீள முடியவில்லை.

History Repeats- Heavy flood in Tirunelveli Thamirabarani River in 1923

வரலாற்றில் ஒரு ஆச்சரியம் என்னவெனில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923-ம் ஆண்டு டிசம்பர் 16, 17 தேதிகளிலும் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் இதே பெருவெள்ளத்தை எதிர்கொண்டது. அதுவும் இப்போது எப்படியெல்லாம் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதோ அதே இடங்களில் அதே மாதிரியான பாதிப்புகள் நிகழ்ந்தன என்பதை 1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி வெளியான இந்து நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி இந்து நாளிதழில் "Madura Floods" என்ற தலைப்பில் வெளியான செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

-தாமிரபரணி நதியில் கடந்த 4 நாட்களாக பெருவெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

- திருநெல்வேலியின் பெரும் குளங்கள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்தோடியது

-திருநெல்வேலி நகரத்தின் சன்னியாசி கிராமம், கைலாசபுரம், வீரராகவபுரம், சிந்துபூந்துறை பகுதிகளில் 3 முதல் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

- திருநெல்வேலி பாலம் ஶ்ரீ வைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட ரயில் நிலையங்களை 3 நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன

- ரயில் நிலையங்களின் ஆவணங்கள், ஊழியர் குடியிருப்புகள், ரயில்வே சொத்துகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

- ஶ்ரீவைகுண்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டது.

- ரயில்வே தடத்தில் தந்தி கம்பங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

- ரயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன

- தென்காசி முதல் திருவனந்தபுரம் வரையிலான ரயில் பாதையில் பாதிப்பு இல்லை.

இவ்வாறு 1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி நாளிட்ட தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

தற்போதைய பெருவெள்ளத்திலும் சிந்துபூந்துறை, வீரராகவபுரம் உள்ளிட்ட திருநெல்வேலியின் பல பகுதிகள் பல அடி உயர வெள்ளத்தில் மூழ்கின. ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் 3 நாட்களாக வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்டது. ஶ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 700க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தவியாய் தவித்து ராணுவம் வந்து மீட்கும் நிலைதான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+