பெஞ்சல் போனாலும் மழை போகலையே! தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று எங்கெங்கு விடுமுறை? லிஸ்ட் இதோ
சென்னை: பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "ஃபெஞ்சல்" புயல், மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - புதுவை கடற்கரையை, புதுச்சேரி அருகில் இரவு சுமார் 11 மணி அளவில், கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில் நேற்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதியில், கடலூருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும் புயலாக நிலை கொண்டிருந்தது.
இந்த நிலையில், மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, படிப்படியாக குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் தாழ்வு நிலையாகவும் வலுவிழக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்த நிலையில் பெஞ்சல் புயலால் சென்னையில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் வடமாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக புதுச்சேரி மாநிலத்திலும், தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் கன மழை பெய்தது.
மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரையில் ஒரே நாளில் 50 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இது கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத மழை அளவு என கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பியதால் வயல்வெளிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்ததால் நேற்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழக அரசு மீட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம், மாவட்டங்களிலும் மழை காரணமாக சேலம் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கனமழை வெள்ளம் காரணமாகவும் மழை நீர் வடியாததன் காரணமாகவும், அந்த மாவட்டங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.
இதேபோல திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்களில், அதாவது ஊத்தங்கரை மற்றும் போச்சாம்பள்ளி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெற இருந்த சிதம்பரம் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மழை பாதித்த பகுதிகளில் பள்ளிகளும் கல்லூரிகளும் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வரும் நிலையில் அந்தந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications