"சம்மர்" முடிந்தது என சந்தோஷம் வேண்டாம்! பெரிய பிரச்சனை இருக்கு! அப்போ இந்தியாவுக்கு என்ன! அலர்ட்
வாஷிங்டன்: இந்தாண்டு கோடை வெப்பத்தில் இருந்து எஸ்கேப் ஆகவே பலரும் சிரமப்பட்ட நிலையில், இந்த ஓவர் வெப்பம் என்பது வரும் காலத்திலும் தொடரும் என்ற அலர்டை உலக வானிலை மையம் கொடுத்துள்ளது.
வழக்கத்தைக் காட்டிலும் இந்தாண்டு வெப்பம் அதிகமாக இருந்ததை நீங்கள் உணர்ந்து இருக்கலாம். இந்தாண்டு கோடைக் காலம் தான் முடிந்துவிட்டதே என்று நீங்கள் ஜாலியாக இருக்க முடியாது. ஏனென்றால் இந்த ஓவர் வெப்பம் என்பது இந்தாண்டு மட்டும் இருக்காதாம்.

இந்தாண்டு கோடை காலம் முடிந்தாலும் கூட அடுத்து வரும் ஆண்டுகளிலும் வெப்பம் அதிகமாகவே இருக்குமாம். இது தொடர்பாக உலக வானிலை அமைப்பு சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
வெப்பம்: பருவநிலை மாற்றம் தொடர்பான உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட முக்கிய ஒப்பந்தமாகக் கருதப்படும் பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பு மீறுமோ என்பதே இப்போது பலரது கேள்வியாக இருக்கிறது. இதற்கான பதில் நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ள டேட்டாவில் இருக்கிறது. கடந்த 1880க்கு பிறகு இருப்பதிலேயே வெப்பமான ஒரு மாதமாக ஜூலை மாதம் இருக்கிறது.
கடந்த 1951 முதல் 1980 வரையிலான ஆண்டுகளில் ஜூலை மாதம் பதிவான சராசரி வெப்பத்தைக் காட்டிலும் இந்தாண்டு ஜூலை மாதம் 1.18 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.
5 ஆண்டுகள்: இந்தாண்டு அதாவது 2023 முதல் 2027க்கு இடையே சராசரி உலக வெப்பம் என்பது குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது தொழில் புரட்சிக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது. அடுத்து வரும் 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு இதுவரை பதிவானதிலேயே வெப்பமான ஆண்டாக இருக்கும். அதேபோல அடுத்து வரும் 5 ஆண்டுகளும் வெப்பமானதாக இருக்க 98% வாய்ப்பு இருக்கிறது.
அதேநேரம் அடுத்து வரும் அனைத்து ஆண்டுகளும் வெப்பமானதாக இருக்கும் எனச் சொல்ல முடியாது என்கிறது உலக வானிலை அமைப்பு. பாரீஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெப்பம் வரம்பு என்பது நிரந்தரமாக இந்த 1.5 டிகிரி செல்சியஸை தாண்டினால் தான் ஆபத்து எனக் கூறியுள்ளது. ஆனால், தற்போது இருக்கும் டேட்டாக்களை வைத்துப் பார்க்கும் போது எப்போதும் ஆபத்து இருக்கும் எனச் சொல்ல முடியாது.
இருப்பினும், ஜூலை மற்றும் கோடைக் காலங்களில் வெப்பம் அதீதமாக இருப்பது நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம். மேலும், ஜூன் மாதத்தின் முதல் சில நாட்களில் பதிவான உலகின் சராசரி வெப்பம் என்பது தொழில்துறைக்கு முந்தைய (1850-1900) காலத்தில் பதிவான சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது, இத்தனை ஆண்டுகளில் கோடைக் காலத்தில் இந்தளவுக்கு வெப்பம் அதிகமாகப் பதிவானதே இல்லை என்கிறது ஐரோப்பிய வானிலை மையம்.
ஏன் முக்கியம்: கடந்த காலங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாட்கள் உலகின் சராசரி வெப்பம் என்பது இந்த 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பைத் தாண்டியுள்ளன. இருப்பினும், அவை டிசம்பர்-ஏப்ரல் காலத்தில் மட்டுமே ஏற்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால், இந்த முறை ஜூலை மாதமே வெப்பம் அதிகரித்துள்ளது. மேலும், ஓரிரு நாட்கள் மட்டுமின்றி தொடர்ச்சியாக சில நாட்கள் வெப்பம் அதிகரித்துள்ளது.
இதனால் இந்த ஜூலை மாதம் அதிகரித்த வெப்பம் என்பது வெறும் அதிகபட்ச வெப்பமாக மட்டும் இருக்காது. மாறாக இந்தாண்டு பதிவாகும் வெப்பம் முதல்முறையாக பாரீஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அந்த 1.5 டிகிரி செல்சியஸ் மார்க்கை தாண்டும் ஆண்டாகவும் இருக்கும் அபாயம் உள்ளது. மேலும், இந்த ஓவர் வெப்பம் என்பது இந்தாண்டுடன் முடியாது அடுத்த சில ஆண்டுகளுக்கும் தொடர வாய்ப்பு உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications