ஜமைக்காவை நிலைகுலைய வைத்த மெலிசா புயல்.. 300 கி.மீ வேகத்தில் சூறாவளி.. கியூபா நோக்கி நகர்கிறது!
கிங்ஸ்டன்: ஜமைக்காவை சூறையாடிய சூறாவளி மெலிசா, தற்போது கியூபாவை நோக்கி நகர்ந்து வருகிறது. மெலிசா சூறாவளியால் மைக்காவில் 3 பேரும், ஹைதியில் 7 பேரும் பலியாகி உள்ளனர். ஜமைக்காவை பேரிடர் பகுதியாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் சூறாவளி என்றும், 174 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட மெலிசா புயல் ஜமைக்காவை கடுமையாக தாக்கி உள்ளது. 5 ஆம் நிலை கொண்ட புயலாக வலுப்பெற்ற மெலிசா மணிக்கு 300 கி.மீ வேகத்தில் ஜமைக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளை தாக்கி, பெரும் மழையை கொடுத்துள்ளது.

ஜமைக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மெலிசா புயல் கரையைக் கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 300 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக பலத்த மழை மற்றும் சீற்றமான கடல் அலைகள் காரணமாக அங்கு வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் என பல கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
ஜமைக்காவை சூறையாடி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ள மெலிசா, அந்நாட்டின் மான்டெகோ விரிகுடாவில் இருந்து கிழக்கு- வடகிழக்கில் 50 மைல் தொலைவில் மையம் கொண்டுள்ளது. குவாண்டனாமோவில் இருந்து தென்மேற்கில் 160 மைல் தொலைவில் 3 ஆம் நிலை சூறாவளியாக மாறி, தற்போது கியூபா மற்றும் பஹாமசை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் கியூபாவில் உள்ள சாண்டியாகோ டிகியூபா, குவாண்டனாமோவில் தாழ்வான பகுதிகளில் இருந்து சுமார் 7 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மெலிசா சூறாவளியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஜமைக்காவின் சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், இந்த சூறாவளிக்கு மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜமைக்காவில் 3 பேரும், ஹைதியில் 7 பேரும் பலியாகி உள்ளனர். ஜமைக்கா முழுவதும் ,இடைவிடாத கனமழை, சூறாவளியால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரமே இல்லை. தகவல் தொடர்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
மெலிசா சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்லென்ஸ் கூறுகையில், "எங்கள் வரலாற்றில் மிகவும் பயங்கரமான சூறாவளியாக மெலிசா பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற 5 ஆம் வகை புயலால் எங்கள் நாடு மட்டுமல்ல, எந்த கட்டமைப்பும் தாங்காது. ஏராளமான மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிகிறோம். இப்போதுள்ள நிலவரப்படி எங்களின் சவால் என்பது மீட்புப் பணிகள் தான்" எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, மெலிசா புயல் மணிக்கு 8 மைல் வேகத்தில் வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்கிறது. நள்ளிரவு வாக்கில் அல்லது அதற்குப் பிறகு தென்கிழக்கு கியூபாவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியூபா சூறாவளிகளை எதிர்கொள்வது புதிதல்ல. கடந்த 25 ஆண்டுகளில் 10 பெரிய சூறாவளிகளை எதிர்கொண்டுள்ளது கியூபா. இருப்பினும், பலத்த மழை, கடலில் எழும் பேரலை மெலிசாவை குறிப்பாக ஆபத்தானதாக மாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications